Friday, March 28, 2025

வீர தீர சூரன் படத்தை 2 பாகங்களாக உருவாக்க முடிவு செய்த அருண் குமார் முதலாவதாக 2ம் பாகத்தை இன்று வெளியிட போவதாக அறிவித்துள்ளார்.

 


Veera Dheeran Sooran First Review: வீர தீர சூரன் முதல் விமர்சனம்.. பராசக்தி பட தயாரிப்பாளர் ட்வீட்!




சென்னை: பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத் என விஜய் சேதுபதியை வைத்து வரிசையாக படங்களை இயக்கி வந்த இயக்குநர் எஸ்.யூ. அருண்குமார் சித்தார்த் தயாரித்து நடித்த சித்தா படத்தை இயக்கி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார். அந்த படத்தை பார்த்து ஆடிப்போன சியான் விக்ரம் உடனடியாக தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கினார்.

 வீர தீர சூரன் படத்தை 2 

பாகங்களாக உருவாக்க முடிவு செய்த அருண் குமார் முதலாவதாக 2ம் பாகத்தை இன்று வெளியிட போவதாக அறிவித்துள்ளார். காலை 9 மணிக்கு தமிழ் நாட்டில் பல தியேட்டர்களில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான B4U என் டர்டெயின்மென்ட் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் காரணமாக வீர தீர சூரன் இன்று காலை 10.30 மணி வரை ரிலீஸ் செய்ய இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 "தங்கலானுக்கு வந்த தலைவலி..வீர தீர சூரன் நாளை வெளியாகுமா?..

கடைசி நேர பஞ்சாயத்து!" இந்நிலையில், வீர தீர சூரன் படத்தை பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் சியான் விக்ரம் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக பராசக்தி படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வெளியிட்டுள்ள ட்வீட் முதல் விமர்சனமாகவே மாறியிருக்கிறது. விக்ரமுக்கு வெற்றி உறுதி: பா. ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக தங்கலான் படத்தில் ஆஸ்கர் படங்களுக்கு உண்டான நடிப்பை கொடுத்தும் படத்தில் இருந்த சில குறைகள் காரணமாக அந்த படம் பெரிதாக ஓடவில்லை. சில இடங்களில் ரசிகர்களுக்கு புரியும்படி படத்தை சொல்லாமல் அரசியல் குறியீடுகளை அதிகம் பா. ரஞ்சித் வைத்தது தான் காரணம் என்றும் விமர்சிக்கப்பட்டது. ஷங்கர் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த ஐ படம் முதல் பல படங்களில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டாலும் பாக்ஸ் ஆபீஸ் ரீதியாக வெற்றியை பெறவில்லை. இந்நிலையில், 

வீர தீர சூரன் விக்ரமுக்கு நிச்சயம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும் என்கின்றனர்.  ஆகாஷ் பாஸ்கரன் விமர்சனம்: அருண் குமார் இயக்கத்தில் சியான் விக்ரம், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமுடு மற்றும் துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று வெளியாகவுள்ள வீர தீர சூரன் படத்தை பார்த்துவிட்ட இட்லி கடை, பராசக்தி உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தனது ட்விட்டர் பக்கத்தில் "வீர தீர சூரன் வாவ் தூள்" என ட்வீட் போட்டு படத்திற்கான முதல் விமர்சனத்தை கொடுத்துள்ளார்.

 "Good Bad Ugly First Review: குட் பேட் அக்லி முதல் விமர்சனம்.. 

ஸ்ரீதர் என்ன இப்படி சொல்லிட்டாரு!" விக்ரம் ரசிகர்கள் உற்சாகம்: பெரும் எதிர்பார்ப்புடன் வீர தீர சூரன் படத்தை விக்ரம் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இன்று திட்டமிட்டபடி படம் வெளியாகும் என்றும் வெளியானால் நிச்சயம் மிகப்பெரிய வசூல் வேட்டையை இந்த படம் நிகழ்த்தும் என்றும் கூறுகின்றனர். அடுத்த மாதம் வெளியாக காத்திருக்கும் அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்தின் வசூலை விட அதிக வசூல் வருமா? அல்லது டிராகன் படத்தின் வசூலை முறியடிக்குமா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன. சியான் விக்ரமின் தங்கலான் படம் மிஸ்ஸான நிலையில், இந்த முறை மிஸ்ஸே ஆகாது என்றும் வீர தீர சூரன் முதல் பாகத்தையும் இந்த ஆண்டுக்குள்ளே வெளியிட வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

"This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"

No comments:

Post a Comment